sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருப்பராய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

/

கருப்பராய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

கருப்பராய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

கருப்பராய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்


ADDED : ஜூலை 06, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ஆனைமலை காளியப்பகவுண்டன்புதுார் அங்காள பரமேஸ்வரி, விநாயகர், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா, இன்று நடக்கிறது.

விழாவையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு அனுக்ஞை, விஷ்வக்ேஷன ஆராதனை, புண்யாகவசனம், வாஸ்துசாந்தி, ரக் ஷாபந்தனம், புற்றுக்கண் பூஜை மற்றும் புற்று மண் எடுத்து சக்தி அழைத்து வருதல்; மாலை, 5:30 மணிக்கு, அக்குரார்ப்பணம், பாலிகா ஸ்தாபனம், தன பூஜை, கலா ஆசர்சனம், கும்பஸ்தானம், காயத்ரி சுப ேஹாமங்கள், பூர்ணாஹுதி, தீபாராதனை; மாலை, 6:30 மணிக்கு பிம்பசுத்தி விமான ஸ்தாபனம், மூலவர் எந்திரப் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

அதேநேரம், இரவு, 7:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு மூல மந்த்ர காயத்ரி ேஹாமலங்கள், பிராண பிரதிஷ்டாேஹாமம், 108 திரவியாஹுதி, பூர்ணாஹுதி, நாடிசந்தனம், யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம், தசதரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், 10:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us