/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : நவ 23, 2025 06:32 AM
அன்னூர்: கெம்பநாயக்கன்பாளையத்தில், பழமை வாய்ந்த உள்ளூர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 12 ஆண்டுகள் முடிந்தது. இதையடுத்து, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி புனித நீர் வழிபாடுடன் துவங்கியது. நேற்று காலை விநாயகர் வேள்வி நடந்தது. மாலையில் விமான கலசங்கள் நிறுவப்பட்டு, எண் வகை மருந்து சாத்தப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 9:00 மணிக்கு, கோபுரம் மற்றும் உள்ளூர் விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், சின்னத் தொட்டிபாளையம் அருணை அருள்முக அடிகளார் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.

