/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவம்பாடிவலசு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
தேவம்பாடிவலசு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
தேவம்பாடிவலசு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
தேவம்பாடிவலசு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : செப் 05, 2025 09:51 PM
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷக விழா நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசில், புகழ்பெற்ற விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷக விழா நேற்று மதியம், 12:00 மணிக்கு ஊர்பொதுமக்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.மாலை, 6:00 மணி முதல் முதற்கால வேள்வி, இரவு, 8:00 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு நடந்தது.
இன்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, காலை, 10:00 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், காலை, 10:30 மணிக்கு எண்வகை மருந்து சாற்றுதல்; மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மாலை, 6:00 மணிக்கு மூலமூர்த்திக்கு எண்வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
வரும், 7ம் தேதி காலை, 5:30 மணிக்கு நான்காம் கால வேள்வி, காலை, 7:30 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, காலை, 8:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல்; காலை, 8:30 மணிக்கு விமான கும்பாபிேஷகம், காலை,8:45 மணிக்கு விநாயகர், மாரியம்மனுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.
காலை, 11:00 மணிக்கு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், காலை, 9:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
நிகழ்ச்சியில், தேவம்பாடிவலசு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.