/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வருகிறது கும்பாபிஷேக யாகசாலை
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வருகிறது கும்பாபிஷேக யாகசாலை
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வருகிறது கும்பாபிஷேக யாகசாலை
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வருகிறது கும்பாபிஷேக யாகசாலை
ADDED : டிச 25, 2024 08:23 PM

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
கோவை மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், முக்தி ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், பிப்., 10ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, கோவில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. அடுத்த மாத துவக்கத்தில், பணிகள் முடிவடைய உள்ளன.
இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. இங்கு அமைய உள்ள யாகசாலை மண்டபத்தில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.