/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு பூஜை
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு பூஜை
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு பூஜை
வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு பூஜை
ADDED : ஜூலை 15, 2025 09:58 PM

மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு, 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா வருகிற, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது.
25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ல் கிராம சாந்தியும், 27ல் கொடியேற்றமும், 28ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நடைபெற உள்ளது. 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.
குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டத்தை சுற்றி, பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்தனர்.
அதன் பின்பு கோவில் பூசாரி, சிறப்பு பூஜை செய்து, குண்டம் கண் திறந்தார். இவ்விழாவில் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.