UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலை தமிழ்த்துறை, திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், ‘திருக்குறள் ஏழு பெருந்திறன் திருவிழா’ என்ற தலைப்பில், பல்கலை, கல்லுாரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் 29ம் தேதி நடக்கிறது.
காலை 9 முதல் மாலை 5 வரை திருக்குறளை மையமாக வைத்து பேச்சு, கட்டுரை, ஓவியம், குறும்படம், இசை, ஒப்புவித்தல் போட்டிகள் நடக்கும். ஏழு பிரிவுகளிலும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு, ரூ. 3000, மூன்றம் பரிசு ரூ. 2000 வழங்கப்படும். மேலும் அறிய 99948 92756 ல் அழைக்கலாம், என கல்விச்சாலை நிறுவனர் கணேசன் கூறினார்.
