UPDATED : அக் 08, 2026 07:32 PM
ADDED : அக் 08, 2026 07:28 PM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடை நகராட்சி கமிஷனர் (பொ) கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
பருவமழை காரணமாக, பவானி ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக தண்ணீர் வருவதால், தலைமை நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார்கள் இயக்க முடியாமல் உள்ளது. குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. எனவே காரமடை நகராட்சி பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. விநியோகிக்கப்படும் குடிநீரை நன்கு காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
