/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் விடுதி கட்டுமானம் எம்.எஸ்.எம்.இ., செயலர் ஆய்வு
/
தொழிலாளர் விடுதி கட்டுமானம் எம்.எஸ்.எம்.இ., செயலர் ஆய்வு
தொழிலாளர் விடுதி கட்டுமானம் எம்.எஸ்.எம்.இ., செயலர் ஆய்வு
தொழிலாளர் விடுதி கட்டுமானம் எம்.எஸ்.எம்.இ., செயலர் ஆய்வு
ADDED : மார் 06, 2024 01:36 AM

போத்தனூர்;சிட்கோ அருகே நடந்து வரும் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டுமான பணியை, எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் ஆய்வு செய்தார்.
குறிச்சி, சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில், தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில், சிட்பி நிதியுதவியுடன், ரூ.22 கோடி மதிப்பில் ஆண் தொழிலாளர்கள் தங்கும் விடுதி சுமார், 40 ஆயிரம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை நேற்று, எம்.எஸ்.எம்.இ.,துறை செயலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார். கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி, பல்வேறு ஆலோசனைகளை கூறிச் சென்றார்.
சிட்கோ மேலாளர் சண்முகவடிவேல், நிர்வாக இன்ஜினியர் பாஸ்கரன், தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க துணை தலைவர் சுருளிவேல், கொசிமா அமைப்பின் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சுருளிவேல் கூறுகையில், ஆண் தொழிலாளர்கள், 500 பேர் தங்க, இவ்விடுதி கட்டப்படுகிறது. 485 சதுரடியில், நான்கு பேர் தங்க, மொத்தம் 102 அறைகள் கட்டப்படுகின்றன.
பணிகளை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க, துறை செயலர் அறிவுறுத்தினார். கொசிமா, டான்காம் உடன் இணைந்து, அதிநவீன பொருட்கள் வடிவமைப்புக்கான ஆய்வகத்தை துவக்கவுள்ளது. இதற்கான சாப்ட்வேர், உள்கட்டமைப்புகளுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் தேவை. இதனை எம்.எஸ்.எம்.இ., துறையிடம் கேட்டுள்ளோம்.
செயலர் விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இந்த ஆய்வகத்தில், சிறு, குறு தொழில்முனைவோர் தங்களது எண்ணங்களை செயல்வடிவமாக்க முடியும். கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுத் தர இயலும், என்றார்.

