ADDED : மார் 19, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி: கணியூரில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி, சிகிச்சை பலனின்றி பலியானார்.
மயிலம்பட்டி ஊராட்சி கரையாம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேசன், 55, தொழிலாளி. இவர், கணியூர் ஊராட்சி சேடர்பாளையம் வந்து விட்டு, மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். அவிநாசி சாலையில் கொள்ளுப் பாளையம் பிரிவு அருகே, வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
