ADDED : மார் 11, 2024 02:04 AM
கோவை;மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ், 33. கோவை துடியலுார் அருகே சுப்பிரமணியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு காசிநஞ்சேகவுண்டன்புதுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இதில், படுகாயமடைந்த ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், கோவை பன்னிமடையை சேர்ந்த சாமிநாதன், 42. லாரிடிரைவர். இவருக்கும், ஜெய்கணேசுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று காலை, கே.என்.ஜி.புதுார் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு ஜெய்கணேஷ் வந்தார்.
அப்போது அங்கு வந்த சாமிநாதனுக்கும், ஜெய்கணேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சாமிநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெய்கணேஷை குத்தியதில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. தலைமறைவாக உள்ள சாமிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.
