தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொழிலாளர் நலவாரிய பதிவு முகாம்

தொழிலாளர் நலவாரிய பதிவு முகாம்

தொழிலாளர் நலவாரிய பதிவு முகாம்


UPDATED : அக் 03, 2026 12:19 AM

ADDED : அக் 03, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:19 AM ADDED : அக் 03, 2026 12:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: பொன்னே கவுண்டன்புதூரில், நாளை நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம் நடைபெறுகிறது.

கட்டுமான தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து கொண்டால், கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண உதவி, இறப்பு, பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியும்.

இதையடுத்து, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், நலவாரியத்திற்கான பதிவு முகாம் வருகிற 4ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பொன்னே கவுண்டன் புதூர், சமுதாய நலக்கூடத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பங்கேற்போர் ஆதார், வங்கி பாஸ் புத்தகம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல், நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் வரவேண்டும்.

'மேலும் விவரங்களுக்கு 98422 26122 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us