UPDATED : அக் 03, 2026 12:19 AM
ADDED : அக் 03, 2026 12:16 AM
அ நிறம் | அளவு
அன்னூர்: 'குழந்தை திருமணம் செய்து வைப்போர் சிறையில் அடைக்கப்படுவர்,' என, கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் அச்சம்பாளையத்தில் நடந்தது. ஊராட்சி செயலர் ஸ்ரீபதி தீர்மானங்கள் வாசித்தார். சமூக நலத்துறை அதிகாரிகள் பேசுகையில்,' பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் நிறைவடைந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். இது குறித்து விழிப்புணர்வு வேண்டும். குழந்தை திருமணத்தால் உடல் ஆரோக்கியம் கெடும். மனநலம் பாதிக்கப்படும்,' என்றனர்.
