ADDED : நவ 23, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி – கோவை ரோட்டில், கோவில்பாளையம் அருகே தனியார் பஸ் மோதியதில், கூலி தொழிலாளி பலியானார்.
கர்நாடகா மாநிலம், மைசூரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷா, 33, கூலி தொழிலாளி. இவர் கோவில்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இன்று (நவ.,23) மதியம் உணவு சாப்பிட பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம் சேரன் நகர் அருகே பைக்கில் சென்றார்.
அப்போது, கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ராமசாமி, 47, என்பவர் ஓட்டி வந்த தனியார் பஸ், சுரேஷா சென்ற பைக் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
