தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பஸ்சில் பயணித்த தொழிலாளி உயிரிழப்பு

அரசு பஸ்சில் பயணித்த தொழிலாளி உயிரிழப்பு

அரசு பஸ்சில் பயணித்த தொழிலாளி உயிரிழப்பு


UPDATED : அக் 07, 2026 07:32 PM

ADDED : அக் 07, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:32 PM ADDED : அக் 07, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: அரசு பஸ்சில் பயணம் செய்தவர், கிழே இறங்கிய சிறிது நேரத்தில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலவஞ்சேரியை சேர்ந்தவர் மணி,56. இவர், வால்பாறை அடுத்துள்ள தலநார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று காலை சொந்த ஊருக்கு செல்ல, கவர்க்கல் எஸ்டேட் வழியாக சென்ற அரசு பஸ்சில் பொள்ளாச்சிக்கு டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.

வாட்டர்பால்ஸ் எஸ்டேட் மருத்துவமனை அருகே சென்ற போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பஸ்சை நிறுத்தி கிழே இறங்கிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து, அரசு பஸ் டிரைவர் மோகன்ராஜ், கண்டக்டர் வேளாங்கண்ணி ஆகியோரிடம் காடம்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us