தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்


UPDATED : அக் 07, 2026 07:11 PM

ADDED : அக் 07, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:11 PM ADDED : அக் 07, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா மருத்துவ முகாமை நடத்தி வருகிறது. பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த முகாமில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை தேவைப்படும் மாற்று திறனாளிகளை சிறப்பு மருத்துவர்கள் ஆய்வு செய்து, மருத்துவ சான்றிதழ்கள் வழங்கினர். மேலும், மருத்துவர்களின் பரிசோதனை அடிப்படையில், இலவச அறுவை சிகிச்சைக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அடையாள அட்டை வழங்க பதிவுகள் மேற்கொள்ளுதல், யூ.டி.ஐ.டி., புதுப்பித்தல், புதியதாக பதிவு செய்தல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவி தொகை, வங்கி கடன் உதவி, உபகரணங்கள், செயற்கை கால் அளவு எடுத்தல், இணைய சேவை, பேருந்து அட்டை பதிவு மேற்கொள்ளுதல், 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, நல வாரியத்தில் பதிவு செய்தல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, மருத்துவம், சமூக நலம், ஆதிதிராவிட நலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம், பள்ளிக்கல்வி, முன்னோடி வங்கி கூட்டுறவு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, வேளாண், போக்குவரத்து உட்பட துறைகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பங்கேற்க பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us