sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூலித்தொழிலாளி குத்திக்கொலைதலைமறைவு லாரி டிரைவர் கைது

/

கூலித்தொழிலாளி குத்திக்கொலைதலைமறைவு லாரி டிரைவர் கைது

கூலித்தொழிலாளி குத்திக்கொலைதலைமறைவு லாரி டிரைவர் கைது

கூலித்தொழிலாளி குத்திக்கொலைதலைமறைவு லாரி டிரைவர் கைது


ADDED : மார் 12, 2024 01:46 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் சாமியாடி, 47. லாரி டிரைவர். கோவை பன்னிமடையில், தனது மனைவியுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

மதுரை மாவட்டம் மேலுாரை சேர்ந்தவர் ஜெயகணேஷ், 33. கோவை துடியலுார் அருகே சுப்பிரமணியம்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கும் சாமியாடியின் மனைவி மணிமாலா, 30 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சாமியாடி இல்லாத நேரத்தில் ஜெய்கணேஷ் அவரது வீட்டுக்கு வந்து சென்றார்.

இவர்களுக்கு இடையேயான பழக்கம் சாமியாடிக்கு தெரிந்து இருவரையும் கண்டித்தார். இந்நிலையில், கடந்த, 10ம் தேதி பணிமுடிந்து காலை வீடு திரும்பிய சாமியாடி, சிறிது நேரத்துக்கு முன் ஜெய்கணேஷ் அங்கிருந்து சென்றதை அறிந்தார். இதையடுத்து தனது மொபட்டை எடுத்துக் கொண்டு ஜெய்கணேஷை துரத்தி சென்று கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

இதுகுறித்து துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த சாமியாடியை தேடி வந்தனர். இந்நிலையில், கணுவாய் பகுதியில் மறைந்திருந்த சாமியாடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us