/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளில்லை: எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆதங்கம்
/
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளில்லை: எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆதங்கம்
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளில்லை: எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆதங்கம்
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளில்லை: எம்.எல்.ஏ. ஜெயராமன் ஆதங்கம்
ADDED : அக் 30, 2025 11:05 PM

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர், என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் நேற்று எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள், இருக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில் வரி அதிகளவு வசூலித்தாலும், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை இல்லை. பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் குப்பை தேங்கியிருப்பதால், சுகாதாரம் பாதித்துள்ளது. சிறுநீர் கழிக்க, 10 ரூபாய் கட்டணம் வசூலித்தாலும்டோக்கன் தருவதில்லை.
பஸ் ஸ்டாண்டில் தெருவிளக்கு வசதியில்லாததால், இரவு நேரம் இருளாக உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாடும் பகுதியாக மாறியுள்ளது. குடிநீர் குழாய்கள் இல்லாததால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இருக்கை வசதியில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, குறுகிய காலத்தில் தெருவிளக்கு, கேமரா, இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்டில் பல தரப்பட்ட வசூல்கள் நடப்பதாக தெரிகிறது. இது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
கோவை ரோட்டில் கோர்ட் அருகே போக்குவரத்து நிறைந்த பகுதியில், எட்டு கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. புதிய பஸ்ஸ்டாண்டில் பஸ் உள்ளே, வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே உள்ளதால் நெருக்கடி ஏற்படும்.
மேலும், போலீஸ், ஆர்.டி.ஓ. என அரசுத்துறை அதிகாரிகள், மக்களிடம் கருத்து கேட்டு பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.

