/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் இடப்பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
/
வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் இடப்பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் இடப்பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில் இடப்பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
ADDED : பிப் 25, 2024 10:30 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியின் வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளியில், இடநெருக்கடியில் சிக்கி தவித்து படித்து வரும் 401 மாணவ, மாணவிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள், இடம் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகும்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் 401 பேர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகில் உள்ள வ.உ.சி. வீதி, பிள்ளையார் கோவில் தெரு, சந்தை கடை, அண்ணாஜீ ராவ் சாலை பகுதியில் இருந்து ஏராளமான குழந்தைகள் இப்பள்ளிக்கு வருகின்றனர். மேலும் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் கூட குழந்தைகள் படிக்க வருகின்றனர்.
401 குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியின் வளாகம் மிகவும் குறைந்த அளவே உள்ளது. 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. புதிதாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பள்ளிக்கு மைதானம் கிடையாது. வகுப்பறைகள் பற்றாக்குறையால் பள்ளி மேடையில், குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்படுகிறது. மேலும் இப்பள்ளிக்கு என 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கூடுதலாக சுழற்சி முறையில் 6 ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வந்து பாடம் எடுக்கின்றனர். மேலும், இதே பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. அதில் 49 குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு 12ம் வகுப்பு வரை குழந்தைகள் இங்கேயே படிக்க வழிவகை செய்ய வேண்டும். பள்ளிக்கு அருகில் உள்ள அரசு இடத்தை பள்ளிக்கு தந்து இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவர்களுக்கு இடவசியும், விளையாட்டு மைதானமும் போதுமானதாக இல்லை. பள்ளியை ஒட்டியுள்ள அரசு நிலம் சுமார் 90 சென்ட் இடத்தை பள்ளிக்கு வழங்கி கூடுதல் கட்டடம் கட்டி தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.------

