/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களே... தயக்கமின்றி சோதனை செய்யுங்க: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்! கூறுகின்றனர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்
/
பெண்களே... தயக்கமின்றி சோதனை செய்யுங்க: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்! கூறுகின்றனர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்
பெண்களே... தயக்கமின்றி சோதனை செய்யுங்க: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்! கூறுகின்றனர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்
பெண்களே... தயக்கமின்றி சோதனை செய்யுங்க: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பி விடலாம்! கூறுகின்றனர் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்
ADDED : பிப் 04, 2024 02:23 AM

கோவை;புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் பலர், வெட்கம், தயக்கம் காரணமாக நோய் முற்றிய நிலையில் வருவதால் காப்பாற்ற முடிவதில்லை எனவும், தயக்கம் தவிர்த்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும் எனவும், டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இன்று, புற்றுநோய் உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், ஆண்கள் மது, சிகரெட், புகையிலை, குட்கா உள்ளிட்ட பழக்கங்களால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முறையான உணவு பழக்கம், உடற் பயிற்சி மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் குகனிடம் இது குறித்து பேசிய போது, அவர் கூறியதாவது:
மார்பகப்புற்று நோய், நகர்ப்புற பெண்களுக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக 22 பெண்களில் ஒருவருக்கு, மார்பக புற்று நோய் இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, 14.67 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு, 15.70 லட்சமாக அதிகரிக்க, வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் பயம், தயக்கம் காரணமாக டாக்டர்களை அணுகுவதில்லை. இதனால் மார்பக புற்று நோயாளிகள், 50 சதவீதம் முற்றிய நிலையில் வருகிறார்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையின் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம் கூறுகையில்,''இன்றைய சூழலில், ஒருவருக்கு என்ன நோய் எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. புற்று நோயும் அப்படித்தான்.
உடலில் ஒரு இடத்தில் வலி இருந்தால் உடனே பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சாதாரண வலி என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
ஆண்டுக்கு ஒரு முறையாவது, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதற்கு ஆகும் செலவை ஒரு பெரிய செலவாக கருதக்கூடாது. என் உறவினர் ஒருவருக்கு, உடலில் எந்த பிரச்னையும் இல்லை; நன்றாகதான் இருந்தார்.
அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்து பார்த்த போது, கேன்சர் இருப்பது தெரிந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்ததால், புற்றுநோயில் இருந்து விடுபட்டார்.
ஒவ்வொருவரும் பிறந்தநாள், திருமண நாள் அல்லது ஏதோ ஒரு பண்டிகை தினத்தில், தங்களின் உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்வதை, வழக்கமாக கொள்ள வேண்டும்,'' என்றார்.