/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 06, 2025 05:55 AM
கோவை; கோவைபுதுார், குளத்துப்பாளையம், அய்யாகவுண்டர் வீதியில் அமைந்துள்ளது, லட்சுமி நாராயண பெருமாள் கோவில்.
கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம் தேதி நடக்கிறது. இதற்கான விழா, நாளை மாலை, 5:01 மணிக்கு வாஸ்து பூஜையுடன் துவங்குகிறது. 5:30 மணி முதல் முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், பாராயணம் நடக்கின்றன.
இரவு, 8:01 மணிக்கு, யாகசாலையும், 9:01 முதல் 10:00 மணிக்குள், மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடக்கின்றன.
வரும் 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு, வேதபாராயணம், நாடி சந்தானம், ப்ராண பிரதிஷ்டையும், காலை, 9:30 மணிக்கு, கடங்கள் புறப்பாடும், 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கின்றன. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.