/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பள்ளியில் விளக்கேற்றும் விழா
/
அவினாசிலிங்கம் பள்ளியில் விளக்கேற்றும் விழா
ADDED : டிச 09, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விளக்கேற்றும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி பேசுகையில், ''ஒழுக்கமே உயர்ந்த வாழ்க்கைக்கு அடிப்படை. முயற்சி இருந்தால் உயர்வு அடையலாம். பெண்கள் தன்னம்பிக்கையுடன், தைரியமாக இருந்தால், சாதனைகள் படைக்கலாம்,'' என்றார்.
தொடர்ந்து, 12ம் வகுப்பு மாணவியர் அனைவரும் விளக்கு ஏற்றி, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பள்ளி தலைமையாசிரியை நளினி உட்பட பலர் பங்கேற்றனர்.