/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.பி.ஜி.,நர்சிங் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா
/
பி.பி.ஜி.,நர்சிங் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா
ADDED : ஜன 30, 2025 07:39 AM

கோவை; கோவை கீரணத்தத்தில் உள்ள, பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா, நேற்று நடந்தது. பி.பி.ஜி.,கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். முதல்வர் சித்ரா வரவேற்றார்.
விழாவில், தமிழ்நாடு ஊரக சுகாதார துறை இணை இயக்குனர் ராஜ்குமார் பேசுகையில், ''செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு, பணியாற்ற வேண்டும். இரவு, பகல் பாராமல் நோயாளிகளை கவனிப்பதில், கனிவோடு செயல்பட வேண்டும். மருத்துவர்களை விட, நோயாளிகளை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள் தான்,'' என்றார்.
விழாவில், பி.பி.ஜி.,நர்சிங் கல்லுாரி தாளாளர் சாந்தி, நிர்வாக குழு இயக்குனர்கள் சுவேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விளக்கேற்றி, மக்கள் சேவையை திறம்படவும், உறுதியுடனும், கடமை உணர்வுடனும் மேற்கொள்ள, உறுதியேற்றுக் கொண்டனர்.

