/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்ரமணியர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
/
சுப்ரமணியர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED : பிப் 12, 2025 11:19 PM

வால்பாறை; வால்பாறை ஹிந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு நடந்தது.
திருவிளக்கு பூஜையை ஹிந்துமுன்னணி கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் துவக்கி வைத்தார். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி, முருகப்பெருமானை மகிழ்விக்கும் வகையில் பக்தி பாடல்களை பாடினர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிளக்கு பூஜையில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நாட்ராயசாமி, செயலாளர் திருமேனிக்குட்டன், ஹிந்து முன்னணி வால்பாறை நகர பொதுச்செயலாளர் லோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

