/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
/
நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்
ADDED : பிப் 19, 2025 09:27 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க, நில உடமை பதிவுகளை சரிபார்த்தல் முகாம் நடக்கிறது.
அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு நில உடமை பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அடையாள எண் வழங்கப்படுவதற்கான பணிகளை வேளாண் துறை முன்னெடுத்துள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்களுக்கு தனித்தனியாக அடையாள எண் வழங்க நில உடமை பதிவுகள், சரிபார்த்தல் பணி, 34 ஊராட்சி அலுவலகங்களிலும் நடக்கிறது.
விவசாயிகள், ஆதார் கார்டு, நில பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் எண்ணுடன் ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று, இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தற்போது வரை, 4,500 விவசாயிகள் பதிந்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நில உடமை பதிவு செய்த விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்படும்.
இதன் வாயிலாக, இனி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வேளாண் திட்டங்கள் இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி வாயிலாக வழங்கப்படும். இதனால், எளிமையாகவும், விரைவாகவும் திட்டங்களை பெறலாம், என, கிணத்துக்கடவு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.