/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு
/
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ.1.50 கோடி நிலம் மீட்பு
ADDED : மார் 27, 2025 11:23 PM

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் ஜோதி காலனி முன்புறம் ஆக்கிரமிப்பில் இருந்த, ரூ.1.50 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் மெயின் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி காலனி முன்புறம், 5.5 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
அதை நேற்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர், மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டிராக்டர் ஆகியவற்றைக் கொண்டு அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் மற்றும் அடித்தளம் ஆகியவற்றை இடித்து அகற்றினர்.
இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கூறுகையில்,' சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அணுகு சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இது குறித்தான அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்றார்.