/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரவான் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
/
அரவான் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : ஜன 16, 2026 05:13 AM
அன்னூர்: கஞ்சப்பள்ளி, அரவான் கோயில் திருவிழாவில், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.
கஞ்சப்பள்ளியில் உள்ள அரவான் என்கிற ராமண மூர்த்தி கோயிலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
கடந்த 6ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும் இரவு பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடுதலும், சிறப்பு வழிபாடும் நடந்தது. 13ம் தேதி இரவு சுவாமியை அலங்காரம் செய்து மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். இரவு சக்தி மயூரன் நாட்டுப்புற கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நளினமாக கைகளை மேலும் கீழும் உயர்த்தி தாழ்த்தி பாடலுக்குகேற்ப ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். மாலையில் அரவானுக்கு சுண்டைக்காய் தண்ணீர் நீராட்டு நடந்தது.
நேற்று அனுமார் அரவானை தேடி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
இன்று காலையில் அங்காளம்மன் கோவிலில் இருந்து அம்பு, வில் எடுத்து வருதலும், கஞ்சப்பள்ளியில் முக்கிய வீதிகளின் வழியாக அரவான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. மாலையில் அரவானை கட்டுமரத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

