sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவிளக்கு ஊர்வலம்

 மாவிளக்கு ஊர்வலம்

 மாவிளக்கு ஊர்வலம்


ADDED : மே 28, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 05:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: கவுண்டம்பாளையம், மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.

அன்னுார், சிறுமுகை சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில், செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. கடந்த 26ம் தேதி இரவு, அணிக்கூடை எடுத்தல், பால்குடம், தீர்த்த குடம் கொண்டு வருதல், அபிஷேக பூஜை நடந்தன. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது.

காலை 11:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மதியம் செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று, மாகாளி அம்மனுக்கு அபிஷேகப்பூஜை, மதியம் மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us