/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லேப்ராஸ்கோபிக் மாநாடு துவக்கம்
/
லேப்ராஸ்கோபிக் மாநாடு துவக்கம்
ADDED : நவ 21, 2025 06:59 AM

கோவை: ஜெம் மருத்துவமனை சார்பில் சர்வதேச அளவிலான 10வது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மாநாடு, ஜெம் லேப்ரோ சர்ஜ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நாளை நிறைவு பெறுகிறது.
கோவை நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி., கன்வென்ஷன் சென்டரில் சர்வதேச அளவிலான லேப்ரோசர்ஜ் என்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை கருத்தரங்கு துவங்கியது.
மாநாடு குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் பழனிவேலு, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் அபிஜாத் ஷேக் ஆகியோர் கூறிய தாவது:
இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும், அருகில் உள்ள தைவான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கருத்தரங்குகள், நேரடி பயிற்சி, அறுவை சிகிச்சை ஒளிபரப்புகள், கலந்துரையாடல், குழு விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.
மார்பக புற்றுநோய், நுரையீரல், குடல் நோய், உடல் பருமன் அறுவை சிகிச்சை தீர்வில் நுண் துளை அறுவை சிகிச்சை பல நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற் பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் இது குறைவு. புற்றுநோய்க்கு லேப்ராஸ்கோபிக் சிகிச்சை நல்ல தீர்வாக உள்ளது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தற்போது மேம்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

