ADDED : ஜன 14, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டது.
வால்பாறை நகரில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் இலவச லேப்டாப் வழங்கும் விழா, முதல்வர் நடராஜ் தலைமையில் நடந்தது. விழாவில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு மாணவர்களுக்கான லேப்டாப்களை வழங்கினர்.
நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் ஆறுமுகம், தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் தற்போது, பல்வேறு பாடப்பிரிவுகளில், 80 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் பயிற்சி முடிந்து வெளியில் செல்லும் மாணவர்கள், 48 பேருக்கு மட்டும் முதல் கட்டமாக லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.
