ADDED : மார் 06, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
போத்தனூர், ஈச்சனாரி கல்லூரியில் பி.காம் படிக்கும் கள்ளக்குறிச்சி ஸ்ரீராம், நண்பர்கள் 6 பேருடன் சீரபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
கடந்த 3ம் தேதி இரவு அனைவரும் அறையின் கதவை சாத்தாமல் தூங்கினர். திடீரென உள்ளே புகுந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி, ஸ்ரீராமின் லேப்டாப், மொபைல்போன் மற்றும் ஒரு நண்பரின் மொபைல் போனை பறித்தனர்.
வெளியே காத்திருந்த கூட்டாளிகளுடன் பைக்குகளில் தப்பினர். மதுக்கரை போலீசார் தேடுகின்றனர்.
