/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக இரும்பு வியாபாரியிடம் மோசடி லேப்டாப், போன்கள், வங்கி புத்தகங்கள் பறிமுதல்

ADDED : மார் 29, 2025 06:32 AM

கோவை : கோவையை சேர்ந்த இரும்பு வியாபாரியிடம், ரூ. 14 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபரை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை, மதுக்கரையை சேர்ந்தவர் வினோத் பாபு, 45; இரும்பு வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்தாண்டு நவ., 7ம் தேதி தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக, 'டிரேட் இந்தியா' இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் அண்ட் ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார். பொருட்களுக்காக தொகை ரூ. 14.72 லட்சத்தை, இணையவழியில் செலுத்தினார்.
பணம் செலுத்திய பிறகு, அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வினோத் பாபுவிடம் பணம் பெற்று மோசடி செய்தது, சென்னையை சேர்ந்த சந்திரசேகர், 43 என்பது தெரியவந்தது. மாவட்ட சைபர் கிரைம் எஸ்.ஐ., மாரிமுத்து தலைமையிலான போலீசார், சென்னை சென்று சந்திரசேகரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில் அவர் மதுரை, ஈரோடு, ஹரியானா, பெங்களூரு, மும்பை மற்றும் கேரளத்தில், ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வதாக, மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், மொபைல் போன்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்திரசேகர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.