/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்துமாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
முத்துமாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
முத்துமாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
முத்துமாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 06, 2025 11:27 PM

குடிமங்கலம்: பூளவாடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று, அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.
உடுமலை அருகே பூளவாடியிலுள்ள, பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில், நேற்று அம்மனுக்கு தீர்த்தம் செலுத்தி, அம்மன் அழைப்பு செய்து, திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவிழாவில், இன்று அம்மனுக்கு மாவிளக்கும், பூவோடும் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.
நாளை (8ம் தேதி) அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், வரும் 9ம் தேதி இரவு, 7:30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிேஷக, ஆராதனை நடக்கிறது.