/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்த மாதம் ரூ.2.19 கோடிக்கு உழவர் சந்தையில் வர்த்தகம்
/
கடந்த மாதம் ரூ.2.19 கோடிக்கு உழவர் சந்தையில் வர்த்தகம்
கடந்த மாதம் ரூ.2.19 கோடிக்கு உழவர் சந்தையில் வர்த்தகம்
கடந்த மாதம் ரூ.2.19 கோடிக்கு உழவர் சந்தையில் வர்த்தகம்
ADDED : டிச 04, 2024 10:06 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகளே நேரிடையாக விற்பனை செய்வதால், மக்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், 2.19 கோடி ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 37 ஆயிரத்து, 166 ரூபாய் மதிப்புள்ள, 15 ஆயிரத்து, 44 கிலோ காய்கறிகள் வந்தன. தினமும் சராசரியாக, 65 விவசாயிகளும், 3,017 நுகர்வோர்களும் வந்தனர்.
கடந்த மாதம், மொத்தம், 476.6 டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, 2 கோடியே, 19 லட்சத்து, 40 ஆயிரத்து, 885 ரூபாயாகும். மொத்தம், 1,910 விவசாயிகள் வந்ததுடன், 95 ஆயிரத்து, 327 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்,' என்றனர்.