/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடந்தாண்டு லோக்அதாலத்தில் 10,792 வழக்குகளில் தீர்வு ரூ.183.65 கோடி பைசல்
/
கடந்தாண்டு லோக்அதாலத்தில் 10,792 வழக்குகளில் தீர்வு ரூ.183.65 கோடி பைசல்
கடந்தாண்டு லோக்அதாலத்தில் 10,792 வழக்குகளில் தீர்வு ரூ.183.65 கோடி பைசல்
கடந்தாண்டு லோக்அதாலத்தில் 10,792 வழக்குகளில் தீர்வு ரூ.183.65 கோடி பைசல்
ADDED : ஜன 16, 2025 03:35 AM
கோவை : கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட, தேசிய 'லோக்அதாலத்' விசாரணையில், 10,792 வழக்கில் தீர்வு காணப்பட்டு, 183.65 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கு களில், இரு தரப்புக்கு இடையே சமரச தீர்வு காண, மாவட்டம் தோறும், தேசிய அளவிலான மெகா 'லோக்அதாலத்' என்ற மக்கள் நீதிமன்ற விசாரணை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், கடந்தாண்டில், மார்ச்,9, ஜூன்,8, செப்.,14, மற்றும் டிச., 14 ஆகிய நான்கு நாட்கள் மெகா லோக் அதாலத் விசாரணை நடந்தது.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலுார், மதுக்கரை, அன்னுார், வால்பாறை ஆகிய கோர்ட்களில் நடத்தப்பட்டது.
நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், தொழிலாளர் மற்றும் குடும்ப நலன், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
கோவை மாவட்டத்தில் மார்ச் 10ல் நடத்தப்பட்ட விசாரணையில், 3,562 வழக்கில், சமரச தீர்வு காணப்பட்டு, 58.77 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது. ஜூன் 8ல் நடந்த விசாரணையில் 2,843 வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு, 29.92 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.
செப்.,15ல் நடந்த விசாரணையில், 1,844 வழக்கில் 40.17 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது. டிச., 14ல் நடந்த விசாரணையில், 2,543 வழக்கில் தீர்வு காணப்பட்டு, 54.79 கோடி ரூபாய் பைசல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில், நான்கு நாட்கள் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத் விசாரணையில், மொத்தம், 10,792 வழக்கில் தீர்வு காணப்பட்டு, 183 கோடியே 65 லட்சம் ரூபாய் பைசல் செய்யப்பட்டது.

