/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கடந்த ஆண்டு 90 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்'
/
'கடந்த ஆண்டு 90 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்'
'கடந்த ஆண்டு 90 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்'
'கடந்த ஆண்டு 90 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்'
ADDED : மே 15, 2025 12:11 AM

கோவை, ; கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி கனவு மற்றும் கல்லுாரிகளின் கண்காட்சி அரங்குகள் துவக்க விழா நடந்தது.
விழாவில், கலெக்டர் பேசுகையில்,''மாவட்டத்தில், 175 கல்லுாரிகள் உள்ளன. உயர்கல்விக்காக வேறு பகுதிக்கு செல்ல வேண்டியதில்லை. அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் கல்லுாரிகள் இங்கு உள்ளன.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு, பிளஸ் 2 முடித்தவர்களில், 90 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டு அதை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். பாரதியார் பல்கலை விரிவாக்கம், தொழில் வழிகாட்டுதல் மற்றும் மாணவர் நலத்துறை தலைவர் விமலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்த தகவல்கள் அடங்கிய, கையேடு வெளியிடப்பட்டது.