/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெற்றி மொழிகள் 100' நுால் வெளியீட்டு விழா
/
'வெற்றி மொழிகள் 100' நுால் வெளியீட்டு விழா
ADDED : மார் 15, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;சிந்தனை கவிஞர் கவிதாசனின்,'வெற்றி மொழிகள் 100' என்ற நுாலின் வெற்றி விழா,கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
வெற்றி மொழிகள் 100 நுாலை கவிதாசன் வெளியிட,இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''தித்திக்கும் மொழி இது, திறன் பேசும் மொழி இது.இப்படிப்பட்ட தமிழ் மொழியில் நமக்கு கவிதைகளை கொடுத்துக் கொண்டிருக்கும் கவிதாசனின் சிறப்பு மிகவும் பெருமைக்குரியது,''என்றார்.
விழாவில் விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

