/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்கம்
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்கம்
ADDED : ஜூலை 03, 2025 09:27 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் இன்று துவங்குகிறது.
தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் இன்று துவங்கப்படுகிறது. இதில், கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில், இத்திட்டதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மரத்துவரை, காராமணி மற்றும் அவரை உள்ளிட்ட விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேபோன்று, தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் வாயிலாக விதைத்தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பெற்றுக் கொள்ளலாம்.
பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தொகுப்புகளை ஆதார் கார்டு அல்லது ரேஷன் கார்டு நகல் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். இதில் முதற்கட்டமாக, 25 நபர்களுக்கு விதை தொகுப்பும், 25 நபர்களுக்கு பழச்செடிகள் தொகுப்பும் வழங்கப்படுகிறது.