/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா
ADDED : ஜூலை 07, 2025 10:49 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா நடந்தது.
கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க அலுவலகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க துவக்க விழா நடந்தது. இதில், 'அட்மா' தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி, உதவி தோட்டக்கலை இயக்குனர் ஜமுனாதேவி, வட்டார துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், பயிறு பெருக்குத் திட்டம் வாயிலாக, துவரை மற்றும் காராமணி, அவரை போன்ற நாட்டு ரக விதைகள் கொண்ட தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி விதைகள் மற்றும் பழச்செடிகள், கீரை விதைகள் உள்ளிட்டவைகள், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.