sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: இரு திராவிட ஆட்சிகளும் கணக்குதான்!

/

சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: இரு திராவிட ஆட்சிகளும் கணக்குதான்!

சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: இரு திராவிட ஆட்சிகளும் கணக்குதான்!

சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: இரு திராவிட ஆட்சிகளும் கணக்குதான்!


ADDED : மார் 17, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் மனநிலையிலும் இதே உஷ்ணம் பரவியிருக்கிறதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். எந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்ததாக கருதுகிறீர்கள்; எந்த ஆட்சியில் விலைவாசி குறைவு ஆகிய இரு கேள்விகளை முன்வைத்ததும், சாமானியர்கள் சரமாரியாக பதில்களை வீசினர்.

கடும் நடவடிக்கை

சமீபகாலமாக நடக்கும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தி.மு.க., அரசு, சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிவிட்டதோ என தோன்றுகிறது. கடும் நடவடிக்கை எடுத்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

- செல்வராஜ் வடவள்ளி புதுார்.

வாழ்வாதாரம் உயரவில்லை

சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, இரு திராவிட ஆட்சியிலும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திலும், எந்த மாற்றமும் இல்லை. விலைவாசி அதிகரித்து கொண்டே போகிறது. மக்களுக்காகவே ஆட்சியாளர்கள் என்ற நிலை இப்போது இல்லை.

- ரமேஷ், 54 வடவள்ளி.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

குற்றச்சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதை கட்டுப்படுத்தவும், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்குவதும் தான் அவசியம். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அடிக்கடி நடப்பதாக தெரிகிறது.

- கணேசன், 56 சுந்தராபுரம்.

எந்த மாற்றமும் இல்லை

சட்டம் - ஒழுங்கு பிரச்னை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானே இருந்தன. இரு ஆட்சியாளர்களுக்கும் எந்த மாற்றமும் இல்லை.

- ரவிக்குமார், 40 இந்திரா நகர்.

பிரச்னைகளுக்கு தீர்வில்லை

தேர்தல் சமயத்தில்தான், கட்சிக்காரர்களை பார்க்கவே முடிகிறது. யார் ஆட்சி செய்தாலும், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வில்லை. இரு ஆட்சியிலும், மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தியதாக தெரியவில்லை.

- சிவலிங்கம், 73 பொன்னம்பாளையம்.






      Dinamalar
      Follow us