/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்தித்து குஷி
/
சட்டக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்தித்து குஷி
ADDED : டிச 30, 2024 12:05 AM

கோவை; கோவை அரசு சட்டக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் மறு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவை, அரசு சட்டக் கல்லுாரியில், 1999 - 2002 ம் கல்வியாண்டில் மாலை நேர கல்லுாரி வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆண்டு தோறும்சந்தித்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான சந்திப்பு நிகழ்ச்சி, கோவை ஆபீசர் கிளப் அரங்கில் நடந்தது. கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், கல்லுாரியில் பயின்ற காலத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
அடுத்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டு என்பதால், அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்வதுடன், படித்தகாலத்தில் பேராசிரியர்களாக இருந்த அனைவரையும் அழைத்து, மரியாதை செய்யவேண்டும் எனவும், முடிவு செய்துள்ளனர்.