/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2025 09:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; வக்கீல் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வலியுறுத்தி, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வக்கீல்கள் சங்கம் தலைவர் துரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வக்கீல் சங்க தலைவர் கூறுகையில், ''வக்கீல் வாஞ்சிநாதன், ஒரு நீதிபதி குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கொடுத்தார். இது பொது வெளியில் பகிரப்படாத நிலையில் வக்கீல் வாஞ்சிநாதன் மீது, அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்,'' என்றனர்.