/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ - பைலிங் நடைமுறையில் சிக்கல்; வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
இ - பைலிங் நடைமுறையில் சிக்கல்; வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இ - பைலிங் நடைமுறையில் சிக்கல்; வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இ - பைலிங் நடைமுறையில் சிக்கல்; வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 08:21 AM

பொள்ளாச்சி: இ - பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வலியுறுத்தி, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நேரடியாக மனுக்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யாமல், 'இ - பைலிங்' முறையில், மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இங்கு அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. 'அப்லோடு' செய்தாலும், 'டவுன்லோடு' செய்ய முடியாத நிலை உள்ளது.
இங்குள்ள அலுவலர்கள், ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. இதற்குரிய தீர்வு காண வேண்டும், என, வலியுறுத்தி கடந்த, 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வக்கீல்கள், கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருந்தனர்.
நேற்று, இ - பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் பிரபு, இணை செயலாளர் அருள்பிரகாஷ், மூத்த வக்கீல் மீரான் மொய்தீன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், இ - பைலிங் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
வக்கீல்கள் கூறுகையில், 'நான்கு கோர்ட்டுகளுக்கு ஒரே இடத்தில், இ - பைலிங் செய்ய வேண்டியதுள்ளதால் காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளன. போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
எவ்விதமான பயிற்சியும் அளிக்காமல் உடனடியாக இதை செயல்படுத்துவதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. இதற்குரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

