/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : செப் 08, 2025 10:51 PM
அன்னுார்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், செப். 8ம் தேதி ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு செய்வது என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
வக்கீல்கள் சேம நல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை வக்கீல்களிடமிருந்து பறிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட் புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
இதனால் அன்னுார் கோர்ட்டில் விசாரணை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.