/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : டிச 04, 2025 07:05 AM
கோவை: இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தியதை கண்டித்து, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களில் மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (இ- பைலிங்) செய்யும் முறை, டிச., 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ- பைலிங் முறையில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை நீக்கிய பிறகு, அமல்படுத்த வலியுறுத்தி, கோவை வக்கீல் சங்கம் சார்பில், வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கோவையில், 3,500க்கு மேற்பட்ட வக்கீல்கள் நேற்று நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள், இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

