ADDED : டிச 17, 2025 05:09 AM

கோவை: நீதிமன்ற வாயில் முன் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ - பைலிங் முறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீதிமன்றங்களில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வரை இ - பைலிங் முறையை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தபால் அலுவலகத்துக்கு வக்கீல்கள் ஊர்வலமாக சென்றனர். அங்கு உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம், தலைமை நீதிபதிகளுக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
கோவை பார் அசோசியேஷன் துணை தலைவர் திருஞானசம்பந்தம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கூறுகையில்,''போதிய வசதிகளை ஏற்படுத்திய பின்னரே இ-பைலிங் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இ-பைலிங் முறையை அமல்படுத்தினால், சிக்கல் ஏற்படும்,'' என்றார்.
