தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வக்கீல்கள் புறக்கணிப்பு வாபஸ்

வக்கீல்கள் புறக்கணிப்பு வாபஸ்

வக்கீல்கள் புறக்கணிப்பு வாபஸ்


UPDATED : நவ 14, 2026 04:45 PM

ADDED : நவ 14, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 04:45 PM ADDED : நவ 14, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 160 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் சேதம் அடைந்துள்ளதால், அங்கு செயல்பட்ட முன்சிப் கோர்ட்களை டாடாபாத் வணிக வளாகத்திற்கு மாற்ற உத்தரவு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் 2 ம் தேதி முதல் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இருக்கும் மற்ற கட்டடங்களுக்கு முன்சிப் கோர்ட்டை இடம் மாற்ற வேண்டும்; குறைந்த வழக்குகளை விசாரிக்கும் சில நீதிமன்றங்களை வேண்டுமானால் டாடாபாத்திற்கு மாற்றலாம்” என வக்கீல்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று நீதித்துறை நிர்வாகம் சில மாற்றங்களை செய்தது.

அதை தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட வக்கீல் சங்க அவசர பொதுக்குழுவில் முடிவு எடுத்தனர். வரும் திங்கள் முதல் வக்கீல்கள் வழக்கம் போல கோர்ட்டில் ஆஜராவார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us