ADDED : மார் 22, 2026 04:57 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு நரிக்குறவர் காலனியில், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள நரிக்குறவர் காலனியில், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது.
மேலும், குடிநீர் வெள்ளை நிறத்தில் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது மட்டுமின்றி குடியிருப்பு முன், தண்ணீர் தேக்கமடைவதால் மாலை நேரத்தில் கொசு தொல்லை அதிகரிப்பதோடு, நோய் தொற்று அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது, என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
