/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்ந்து நிற்கும் சிக்னல்:கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
/
சாய்ந்து நிற்கும் சிக்னல்:கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
சாய்ந்து நிற்கும் சிக்னல்:கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
சாய்ந்து நிற்கும் சிக்னல்:கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : அக் 07, 2025 12:38 AM

பொள்ளாச்சி:கோவை ரோடு - மகாலிங்கபுரம் சந்திப்பில், சாய்ந்தும், பழுதடைந்தும் இருக்கும் சிக்னல் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளது. இதனை தவிர்க்க, மரப்பேட்டை பாலம், தேர்நிலையம், கடைவீதி சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, திருவள்ளுவர் திடல் பகுதிகளில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, வாகன ஓட்டுநர்களை 'அலர்ட்' செய்யும் வகையில் ஓம்பிரகாஷ், சின்னாம்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் 'பிளிக்கரிங்' சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது.
செயல்பாட்டில் இருக்கும் சிக்னல்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிக்னல்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், மகாலிங்கபுரம் - கோவை ரோடு சந்திப்பு பகுதியில், சிக்னல் கம்பங்கள் துருப்பிடித்து சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை, அப்புறப்படுத்தி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
சிக்னல் கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் மீது விழும் நிலையில் உள்ளன. சேதமடைந்த சிக்னல் கம்பத்தை அகற்றி, அதற்கு மாறாக, சிக்னல் கம்பங்கள் முழுவதும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் ஒளிரும் வகையில் எல்.இ.டி., விளக்குகள் அமைக்க வேண்டும். அப்பகுதியில், சீரான போக்குவரத்திற்கு திட்டமிட்டு, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.