/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்'
/
'இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்'
ADDED : நவ 07, 2024 08:19 PM

சூலுார்; ''இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்,'' என, குடும்ப சங்கமம் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
சிவராம் ஜி சேவா டிரஸ்ட் சார்பில், குடும்ப சங்கம விழா, பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் நடந்தது. டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், 180க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
கணபதி வழிபாடு மற்றும் கோ பூஜை நடந்தது. தம்பதியினர் குடும்பத்துடன் கோமாதாவை, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து, பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியே கேள்வி, பதில் உள்ளிட்ட குழு போட்டிகளும், விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
சுவாமி நிகிலேஷ் அமிர்த சைதன்யா ஆசியுரை வழங்கி பேசுகையில், ''இயற்கையோடு ஒன்றி வாழ்வதே சனாதன தர்மத்தின் முக்கிய நோக்கமாகும். நம் ஒவ்வொருவருக்கும் பகுத்து அறியும் அறிவு உள்ளது. வேறு எந்த ஜீவ ராசிக்கும் அது கிடையாது. அதை பயன்படுத்தி நாம் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். இயற்கையை அழித்து வாழ நினைப்பவர்களை, இயற்கை அழித்து விடும். அவற்றை நாம் பேரிடர்கள் வாயிலாக கண்டிருக்கிறோம். அதனால், இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை மேட்டுப்பாளையம் ஜில்லா ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சம்பத்குமார் வழங்கினார்.

