/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுபவங்களிலிருந்து கற்கும் பாடம் முக்கியம்
/
அனுபவங்களிலிருந்து கற்கும் பாடம் முக்கியம்
ADDED : ஜன 20, 2024 02:33 AM
பள்ளி என்பது குழந்தைகள் கற்கும் இடம். ஆனால் கற்றல் என்பது பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களுடன் முடிவடைந்து விடுவதில்லை. அறிவு, புதிய பரிமாணங்கள், திறன்கள், மதிப்புகள், அணுகுமுறைகள், விருப்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே கல்வி.
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, வளர்ச்சியடைந்து வரும் சமூகத்துடன், கல்வி முறையையும், கற்றல் அணுகுமுறையையும் புதிதாக உருவாக்கி வருகிறது. மேலும், பழைய அணுகுமுறையிலிருந்து மாற்றம் அடைந்து வருகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் முறையையும், புதிய நுட்பங்களையும் பயன்படுத்தி இன்றைய சூழலுக்கேற்ப குழந்தைகளை தயார் படுத்த வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்க உதவுகிறது. அவர்களின் ஆர்வங்களை கண்டறிய உதவுகிறது. அதற்கேற்ப அவர்களின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறது.
குழந்தைகள் அனைவரும் வேறுபட்டவர்கள், வித்தியாசமானவர்கள். ஒரு குழந்தையைப் போல் மற்றொரு குழந்தை இருப்பதில்லை.
இங்குதான் குழந்தைகளுக்கான கற்றல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தை கற்றுக்கொள்வதற்கும், தவறுகளைச் செய்வதற்கும், அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் சூழலும், சுதந்திரமும் வழங்க வேண்டும்.
குழந்தைகள் கல்வி மற்றும் கல்விசாரா அறிவைப் பெறுவதற்கு வகுப்பறைகள் முதன்மைச் சூழலாக இருந்தாலும், அவர்களின் வளர்ச்சி வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடக் கூடாது. பள்ளிக் கல்வியுடன், வெளி உலக அனுபவங்களிலிருந்து கற்கும் பாடமும் மிக முக்கியமானது.